Thursday, February 7, 2013

திருச்சபையின் ஒழுங்குமுறைகள்

திருச்சபையின் ஒழுங்குமுறைகள்

1. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காண்கிறது.

2. வருடத்திற்கு ஒருமுறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது.

3. பாஸ்கு காலத்தில் பாவ சங்கீர்த்தனம் செய்து தேவநற்கருணை உட்கொள்ளுகிறது.

4.சுத்தபோசன நாட்களில் சுத்த போசனமும், ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது.

5.விலக்கப்பட்ட காலத்திலும் குறைந்த வயதிலும் விக்கினமுள்ள உறவு முறையாரோடும் கல்யாணம் செய்யாதிருக்கிறது.

6.நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.

Tuesday, February 5, 2013

பத்துக்கட்டளைகள்/பத்துக்கற்பனைகள்

சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து.

1. உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே, நம்மைத்தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக.
2. சர்வேசுரனுடைய திருப்பெயரை வீணாகச் சொல்லாதிருப்பாயாக.
3. சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக.
4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக.
5. கொலை செய்யாதிருப்பாயாக.
6. மோகபாவம் செய்யாதிருப்பாயக.
7. களவு செய்யாதிருப்பாயாக.
8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.
10. பிறர் உடமையை விரும்பாதிருப்பாயாக.

இந்த பத்து கற்பனைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்.

1. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது.
2. தன்னைத்தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.

Saturday, September 22, 2012

விசுவாசப் பிரமாணம்


பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏகசுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னி மரியாயிடமிருந்து பிறந்தார். போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடம் இருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்தில் இருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். புனிதர்களுடைய சமுதீதப்பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். அமென்.



Saturday, July 28, 2012

மங்கள வார்த்தை ஜெபம்

அருள் நிறைந்த மரியே வாழ்க கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் அசீர்வதிக்கப்பட்டவரே.

அர்ச்சிஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.

கர்த்தர்/கிறிஸ்து கற்பித்த ஜெபம்

பரலோகத்தில் இருக்கிற எங்கள்பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக உம்முடைய இராச்சியம்
வருக  உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக.

எங்கள் அனுதின  உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தின்மை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும்.
 தின்மையிளிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.  

Monday, June 4, 2012

ஆறு இலட்சணங்கள்

ஆறு இலட்சணங்கள்


1 . சர்வேசுரன் தாமாயிருக்கிறார்.

2 . துவக்கமும் முடிவும் இல்லாமலிருக்கிறார்.

3 . சரீரமில்லாமலிருக்கிறார்.

4 . அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராயிருக்கிறார்.

5 . எங்கும் வியாபித்திருக்கிறார்.

6 . எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாயிருக்கிறார்.

ஆமென்.

மரியாயின் பொக்கிஷம்

மரியாயின் பொக்கிஷம் என்ற ஜெப புத்தகத்தை வலையேற்றம் செய்யும் முயற்சி இது. மரியாயின் பொக்கிஷம் என்ற ஜெப புத்தகத்தில் உள்ள ஜெபங்களை ஒவ்வென்றாக வலையேற்றம் செய்யலாம் என்றிருக்கிறேன். இது அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.




சிலுவை அடையாளம்

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.



அர்ச்சிஷ்ட சிலுவை ஜெபம்

அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுரா பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.